![...](https://api.writco.in/assets/images/post/default/story-poem/normal/HEART BREAK B.webp)
5 views
காதல் என்னும் அவள்
காதல் என்னும் அவள்
கண்ணிமைக்குள் கருக்கொள்ளும் கன்னிமகள்...
கடவுளையும் ஆட்டி வைக்க எண்ணுபவள்...
இதயம் என்னும் இரும்புக் கதவை
எளிதாய் துளைக்கும் ஈட்டியவள்...
காதல் என்னும் பெயர்சுமப்பாள்...
கருணைத் தாயின் வழி பிறப்பாள்...
சாதிப் பேயின் சதிவலையில்
சாதல் அறிந்தும் போரிடுவாள்...
நெஞ்சம்தன்னில் நிறைந்திடும் அன்பின்
நெறியை அழகாய்க் கூறிடுவாள்...
சமூகம் தன்னில் சுயநலக்கிருமிகள்
சாக்கடை என்றே மண்தூற்றும்
உள்ளம் தன்னில் தூய்மை அன்பு
உடையோர் மனங்கள் தினம்போற்றும்...
© த.கிருத்திகா
கண்ணிமைக்குள் கருக்கொள்ளும் கன்னிமகள்...
கடவுளையும் ஆட்டி வைக்க எண்ணுபவள்...
இதயம் என்னும் இரும்புக் கதவை
எளிதாய் துளைக்கும் ஈட்டியவள்...
காதல் என்னும் பெயர்சுமப்பாள்...
கருணைத் தாயின் வழி பிறப்பாள்...
சாதிப் பேயின் சதிவலையில்
சாதல் அறிந்தும் போரிடுவாள்...
நெஞ்சம்தன்னில் நிறைந்திடும் அன்பின்
நெறியை அழகாய்க் கூறிடுவாள்...
சமூகம் தன்னில் சுயநலக்கிருமிகள்
சாக்கடை என்றே மண்தூற்றும்
உள்ளம் தன்னில் தூய்மை அன்பு
உடையோர் மனங்கள் தினம்போற்றும்...
© த.கிருத்திகா
Related Stories
5 Likes
2
Comments
5 Likes
2
Comments