...

10 views

பள்ளிக்கூடம்


###############

மால்னி "நர்மிகா டெக்ஸ்" இல் கடந்த ஒருவருடமாக வேலை செய்கிறாள். எறும்பு போல தன்னுடைய வேலையை ஓடியாடிச் செய்யும் மால்னியை யாருக்குதான் பிடிக்காது. வறுமைக்கோட்டின்கீழ் வாழ்வதால், என்னவோ! அவளது கண்களில் சந்தோசத்தை யாருமே கண்டதில்லை. எப்போது பார்தாலும் எதையோ! பறிக்கொடுத்தது போல இருப்பாள்.

அன்று மாலை, மால்னி தன் வேலைகளை முடித்துவிட்டு, விடுதி திரும்பியதும், கையிலிருந்த பையை தூக்கியெறிந்து விட்டு, அமைதியாக அருகிலிருந்த கதிரையில் அமர்ந்தாள்.

'சீனு! சீனு! இங்கே வா!'
என்றாள்.

"ம்ம்ம்ம்ம..... இப்பவா! வந்த....."

"ஆமா....
சீனு அக்கா" எங்க போனிங்க.

"இதோ உன் எதிரிலேதான் இருக்கேன்"
என்றாள் சீனு.

நான் கவனிக்கவில்லை. ரொம்ப அசதியாக இருக்கிறது. சீனு அக்கா! இந்தக் கடிதத்தை படியுங்கள்.

"என்ன கடிதம் இது"

"காதல் கடிதம்தான்"

"என்ன?"

"ஆமாம்" கடை விலாசத்திற்கு வந்தது. படியுங்கள் அக்கா. யார் என்று சொல்கிறேன்.

ம்ம்

'என் அன்புள்ள காதலிக்கு, உன்னை பார்த்து எவ்வளவு நாட்களாகி விட்டது. எப்போது ஊருக்கு வருவாய். என் மனமோ! உன்னை மறக்கவும் இல்லை, என் வசமும் இல்லை. உன்னை பார்த்த கணமே தொலைத்துவிட்டேன்..'

ம்ம்... மேலே
படியுங்கள்.!

உணவில்லை, உறக்கமில்லை. உன்னை மீண்டும் ஒருமுறை பார்த்தால்தான் என்னுயிர் இம்மண்ணில் வாழும். "இப்படிக்கு உன் ஒருதலைக்காதலன் சுரேஸ்"

'யாரடி இந்த சுரேஸ்'

என் பக்கத்துவீட்டுப் பையன். பள்ளிக்கூடம் படிக்கையில் நானும் அவனும் ஒரே வகுப்பில் படித்தோம். என் மீது அவனுக்கு 'தீராதக்காதல்'. காதல் பித்தில் ஏராளமான கடிதங்களையும், இனிப்புகளையும் என் பள்ளித்தோழியிடம் கொடுத்து அனுப்புவான். எனக்கோ! அவனைக் கண்டால், தீ மீது நிற்பது போல இருக்கும்.

ஒருநாள் இவனுடைய தொல்லைத் தாங்கிக் கொள்ளமுடியாமல், பாத்திமா டீச்சரிடம் சொல்லிவிட்டேன். அவனை தனியாக அழைத்து , அறிவுரைகளை வழங்கினார். அதிலிருந்து தொடர்ந்து, ஐந்து நாட்கள் நெற்றியில் விபூதியும், கையில் புத்தகமுமாக பள்ளில் வலம் வந்தான்.

மீண்டும் தொடங்கியது, அவனது காதல் ரகலைகள்.  நான் பஸ்ஸில் தான் பள்ளிக்கு செல்வேன். அதே பஸ்ஸில் அவனும் வருவான். சாயங்காலமும் இதே கதி.  நான் போகும் மேலதிக வகுப்பிலும் இணைந்துக்கொண்டான். எனக்கு அவன் மீது காதலா! என்று தெரியவில்லை. ஆனால் அவன் மீதொரு விருப்பம் இருந்தது.

அவனது பள்ளக்கால ஒருதலைக்காதல் வாழ்க்கையையே திசை திருப்பிப் போட்டுவிட்டது. ஒருநாள் பஸ்ஸில் சனநெருக்கடி சுரேஸ் நெருக்கமாக என்னருகில் நின்றுவிட்டான்.  உண்மையில் என்னாலும் அவ்விடம்விட்டு கொஞ்சம் கூட விலகமுடியவில்லை. அப்பஸ்ஸில் இருந்த பக்கத்துவீட்டு 'மல்லிகா' அக்கா அப்பாவிடம், நானும் அவனும் பேசிக்கொண்டு வந்ததாகவும், காதல் என் கண்னை மூடிவிட்டதாகவும், நாணமின்றி அவனுடன் கதைத்துக்கொண்டு வந்ததாகவும் கூறிச்சென்றுவிட்டார். அன்றிரவு என் மண்டை உடையவில்லை மாறாக, என் அம்மாவின் மண்டை உடைந்து இரத்தம் ஆறாக வீட்டில் பெருக்கெடுத்தது.

"பொட்டப்புள்ளைய இப்படியா வளப்ப..
அவள சொல்லி குத்தமில்ல ... உன்ன அடிக்கனு"

இனியிவ பள்ளிக்குடோ போவத் தேவல...

"ரெண்டு மூனு வருசம் வீட்டோட கெடக்கட்டும்.
அப்ரம் ஒருதே கையில புடிச்சிக் குடுப்பம்."

நான் தொடர்ந்து இரண்டு மாதங்கள் பள்ளிக்கு செல்லவில்லை. தேர்வும் நெருங்கிக் கொண்டிருந்தது.  எனக்கோ படிப்பின் மீதிருந்த ஆசை வெகுதூரம் சென்றுவிட்டது.

கடந்த வருட இறுதியில், அப்பா வேலையில் இருந்து ஓய்வுப்பெற்றார். மூத்தவன் 'ராதா' 10ஆம் தரம் படிக்கிறான். இளையவன் 'வேனி' குறும்புக்காரன். எங்கள் வீட்டுக் கடைக்குட்டி. 8ஆம் தரம் படிக்கிறான்.

வறுமையும், நான் செய்யாத தவறும் என் படிப்பினை தொடர முடியாமல், செய்துவிட்டது. அப்பாவின் நெருங்கிய நண்பரின் கடையில்தான் நான் இப்போது வேலைச் செய்துக்கொண்டிருக்கிறேன்.

'சரி சரி விடு'
'உன்னோட படிப்பு வீணா போனது. உண்மத்தான்
ஆனா உன்னால இன்னைக்கு ஓ தம்பிங்க படிக்குறாங்களே..
அத நினைச்சி மனச தேத்திகோ'

"உண்மதா அக்கா" என்றாள்.

இரவு உணவை இருவரும் உண்டார்கள். நாளைக்காலை 7மணிக்கு வேலைக்கு செல்ல வேண்டும். இம்மாதமும் எப்படியாவது 20ஆயிரத்துக்கு மேல் சம்பளம் வாங்கி வீட்டிற்கு அனுப்ப வேண்டும். என்ற எண்ணம் மட்டுமே அவளது சிந்னையில் இருந்தது.

இரண்டு வாரங்களுக்கு பின்பு... மீண்டும் ஒரு கடிதம் வந்தது. மால்னி நலமாக உள்ளாயா? இனி நான் உன்னை தொந்தரவு செய்யமாட்டேன். நான் "ஏசியன் மீடியாவில்" பணிபுரிகிறேன். மாத வருமானம் 50ஆயிரத்திற்கு மேல், என்னால் தானே உனது படிப்பினைத் தொலைத்து இன்று கஸ்டப்படுகிறாய். என் வீட்டில் உன்னைப்பற்றி பேசிவிட்டேன். உன்வீட்டு சம்மதத்துடன் திருமணத்தை அவ்வாரத்திலே நிச்சயிக்கலாம் என்று கூறினார்கள். நீ வேலைச் செய்யும் கடை விலாசத்தினை அறிந்து கடிதம் போட்டேன். நான் மனதில் இருக்கிறேனா? என்று தெரிந்துக்கொள்ள. ஆனால் அதற்கு அவசியமில்லை. காற்றோடு காற்றாக என்னை "கொரோனா" தொற்றியுள்ளதாக உறுதிச்செய்யப்ட்டுள்ளது... என்னை மன்னித்துவிடு ஏதோ ஒருவகையில் நீ இன்று  இயந்திரம் போல உழைத்துக் கஸ்டப்பட நானும் ஒரு காரணமாகிவிட்டேன்.  இப்படிக்கு, உயர் போனாலும் உன் நினைவு போகாத. "சுரேஸ்"

கடிதத்தை வாசித்த போது கண்களில் கண்ணீர் அருவியாய் செரிந்தன. தவறாக நினைத்துவிட்டேன்! அவன் காதலின் ஆழத்தினை அறியாது அவமதித்துவிட்டோம். அவன் இத்தொற்றில் இருந்து மீண்டு வருவான். அவனது பள்ளிக்காதல் மீண்டும் மணமாலையாகும் என்ற நம்பிக்கையில் விடுதிக்கு திருப்பினாள்..

உண்மையில் தகுதி, நிறம், சாதி, மதம் எதனையும் எதிர்ப்பாராது வருகின்ற காதல் பள்ளிக்காதலே.. நம் ஒவ்வொருவருடைய மனதிலும் பள்ளிக்காதல் அழியா வரமாக வாழ்கிறது.

                     
                          நன்றி

பரமசிவம் இந்துஜா
இலங்கை.