...

37 views

வித்தியாசமானவன் (நன்றி -வாரமலர்)
தினமலர் வாரமலர் இதழில் வெளிவந்த அடியேனின் கவிதை தங்கள் பார்வைக்கு....

'கன்னிமயில்
தன்
கண்ணிமையில் சாடை ஒன்று காட்டாதோ...
என்ற ஏக்கம் கொண்டோர் மத்தியில்...
நான் கொஞ்சம்
வித்தியாசமானவன்...

பஸ் ஸ்டாப்பில் நின்று
பல்லிளிக்க மாட்டேன்
கிட்டே போய் இடித்து
கிண்டல் செய்ய மாட்டேன்

இளைஞர்கள்
கோயிலுக்குப் போவர்
சாமி கும்பிட அல்ல..
'சாமி' பார்க்க...
ஆம்...
அவரவர்களின்
இஷ்ட தெய்வத்தை
பார்ப்பதற்காக..

நான் அப்படியல்ல...
கோயிலுக்கே போவதில்லை
அப்படியே போனாலும்
நமைப்படைத்த கடவுளையும்
பார்க்க மாட்டேன்

அப்படியானால்...
நீ யோக்கியன் தான்
என்கிறீர்களா...
இல்லை...
நான் யோக்கியன் இல்லை
அதற்காக..
அயோக்கியன் என்று
அர்த்தமல்ல...
சராசரி மனிதன் தான்...
ஆனால்..
பார்வையற்றவன்...