...

1 views

வான்லோகத்தித்தின் இளவரசி
பல கதைகள் இங்கே உண்டு பல அழகிகள் அதில் உண்டு, பலர் எழுதிய கவிதைகளும் கதைகளும் பாசுரங்களும் உண்டு ஆனாலும் எல்லாமே சங்க இலக்கியம் ஆயிற்றே,
இப்பொழுது யாரேனும் இருந்தால் இவள் அழகை அல்லவா வர்ணித்து பல பாசுரம் எழுதி இருப்பார்கள்,
ஒரு வேலை எல்லோரும் திகைத்து கூட போய் இருக்கலாம் இவளின் அழகினை வர்ணிக்க வார்த்தைகள் இங்கே இல்லையே என்று.
முதற்வரி எழுதிட நினைத்து மொத்தமும் சித்தம் சட்டென்று நின்று போதனை எப்படி விவரிப்பேன், இதுவரை அறியா அழகிளின் மொத்தம் இங்கே இருக்க எங்கே எனது வார்த்தைகள் என மொத்தமாய் காணாமல் போனதை தேடுவதா இல்லை மயக்கம் கொண்ட இருவிழிகளை மறைப்பதா,
இவள் என்ன மாய மோகினியா இல்லையே இரு விழிகளும் கூறுதே இவள் அழகியலின் முதற் பக்கம் என.
யாரேனும் கவிஞன் உருவாக வேண்டும் எனில் இவளின் கண்கள் போது ஆயிரம் கவிதைகள் மொத்தமாய் ஊற்று எடுக்கும்.
நானும் மாண்டன் அல்லவா, வான் லோகத்து தேவதையை வர்ணிக்க எப்படி இயலும்...
இருந்தாலும் மனம் வரைந்த சிறிய குறிப்புகள் இது...
© அருள்மொழி வேந்தன்

Related Stories