...

23 views

நான் எது....
எனது சந்தோஷம் துக்கம்
கோபம் சந்தேகம் ஆன்மீகம் அரசியல் எல்லாவற்றையும்
பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்

ஒரு புது சட்டை அணிந்தால்
உனக்கு காட்ட ஆசைப்படுகிறேன்

புதுப் பொருள் வாங்கினால்
உனக்குச் சொல்ல ஆசைப்படுகிறது மனசு

வாரம் ஒரு முறையாவது
தூரத்திலிருந்தாவது
உனைப் பார்க்கத் துடிக்குது
மனசு...

என் நினைவுகளில்
நீ வாழும் அழகை
வார்த்தைகளில் வார்த்தெடுக்கும்
பொழுதெல்லாம்
அதை நீ பார்த்து ரசிக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறது
இந்த பாழும் மனசு...

இதற்கு பொருள்
எதுவாக வேண்டுமானாலும்
இருந்துவிட்டுப் போகட்டும்
நான் அதுவாகவே
இருந்துவிட்டுப் போகிறேன்...!!

© கிருஷ்ண சங்கர் 🖊