...

3 views

கைதி
எண்ணிலடங்கா நேரங்களில்
எண்ணங்கள் மட்டுமே இவர்களின் துணையாய்
உரக்க சொல்ல நினைக்கும்
இவர்களின் உணர்வுகள்
தினமும் இரவில் காணும்
கனவை போன்றது ,
இவர்களை சுற்றி
இரவும் உண்டு,
இவர்களை சுற்றி
பகலும் உண்டு,
பலர் சமயலறையில்,
பலர் குளியலறையில்,
கல் உடைப்பவன் ஒரு புறம்,
கனா காண்பவன் மறு புறம்,
மாற்றி மாற்றி வேலை முடித்து
மல்லாந்து படுத்து யோசித்தான் ஒருவன்
அவன் காதலியை!
அன்று அவளை
பார்த்த நாட்கள்
இன்றும் அவன் மனதில்;
"அனுபவிக்க முடியா
அபாக்கியசாலி ஆனான்
அவர்கள் வீட்டிலேயே திருடியதால்!"
கழிப்பறையில் அமர்ந்து
ஒருவன் கண்ணீர் சிந்தினான்,
"காலமெல்லாம் காப்பேன்
என்றேன் என்னவளை ,
அவள் கருவறையை காப்பாற்ற இன்று கொலைக்காரனாய்
இந்த கழிவறை நாற்றத்தில்!" என்று,
ஆயுள் தண்டனை என்ற பெயரில் இவர்கள் ஆயுள் கடந்தாலும்,
அறிவாளனாய் மாறியவர் சிலரே;
அன்பை சொல்ல இவர்களிடமும்
பாஷை உண்டு;
ஆசையை சொல்ல இவர்களிடமும்
மனம் உண்டு;
கண நேர மாற்றத்தில்
கனவுகளை தொலைத்த இவர்கள் தான் இந்த கூண்டுக்குள் இருக்கும்
சிறைச்சாலை கைதிகள்!

© ❤நான் வாணி ❤