...

8 views

எங்கே என் ராதா
ராதை இன்றி கிருஷ்ணன் இல்லையே,
ராதை இல்லா கிருஷ்ணன் இங்கே இருப்பதும் இல்லையே,
நானும் என் ராதையை தேடியே அழைகிறேன் ஏனோ என் ராதை என் கண்களில் தென்படவே இல்லையே.
அவள் இன்றி நான் தான் முழுப்பெருவேனோ.
ஆணின் ஆன்மா பெண்ணவளின் காதலால் முழுமை பெறும் என்பதை எப்பொழுது உணர்வாய் ராதா. இங்கே தனியே என் இதயம் காத்திருக்க காதல் மொத்தமாய் கொடுத்தால் தான் என்னவோ,
மாயோன் நானும் மாயை புரிய நினைத்தாலும் மாயம் செய்பவள் நீ அல்லவா,
மௌனம் கலைத்து மோகனம் இசைப்பாய் நீயே,
என் புல்லாங்குழல் (மனம் )உன் மூச்சிகாற்றில் முழுமை பெறவே காத்திருக்க,
காலம் செல்ல செல்ல ஏனோ என்னை தொலைக்கிறேன்.
என்னை முற்றிலுமாய் தொலைத்து விட்டு உன்னில் சரணடைந்து நம் காதல் என்னும் காவியம் படைக்க தான் தவம் ஒன்று இருக்கிறேன்..
ராதா ராதா
© அருள்மொழி வேந்தன்

Related Stories