...

7 views

காதல் சொல்ல வந்தேன்

எப்பொழுதும் அலாரம் அடித்த
பின்னர் அதை தலையிலே
அடித்து அமர்த்தி இன்னும்
கொஞ்சநேரம் உறங்குவான்..

அன்று அவனது அலாரம்
கண் விழிக்கும் முன்னரே
அவன் விழித்து சற்று திகில்
கிளப்பினான் அந்த அலாரத்துக்கே..

கல்லூரி இறுதி ஆண்டின்
இறுதி நாள் அன்று..அதை
விட்டால் இனி அவளிடம்
என்றும் அவன் காதலை கூற
வாய்ப்பென்பதே கிடையாது..

இருவரும் ஹாஸ்டல் வாசிகளே..
இவனோ தமிழகத்தின் தெற்கும்
அவளோ கேரளத்தின் வடக்கும்
ஆனதால் தொடர்பறுந்திட
வாய்ப்புகள் அதிமே..

ஆரம்பத்திலே சொல்ல மறந்த
ஒன்று..இது ஒரு 90s காதல்..
மனதில் வைத்து மேலும்
படிக்க தொடங்குங்கள்..

வாட்ச்மேன் மட்டுமே வந்திருந்த
கல்லூரி வளாகத்தில் அன்றொரு
நாள் மட்டும் முதல் மாணவனாய்
உள்ளே நுழைந்தான்..

இந்நிகழ்வை கண்டு வியக்ககூட
ஆள் இல்லாத அளவுக்கு இருந்தது
அவன் கல்லூரிக்கு சென்ற நேரம்..

அதெப்படி அவள் இவன் காதலை
கூறினால் சம்மதிப்பாள்..
என்ன தைரித்தில் அவளிடம்
இறுதியாண்டில் அதுவும் இறுதி
நாளில் கூறவருகிறான்..

அவ்வளவு தைரியமா..
அவ்வளவு தன்னம்பிக்கையா..
தான் ஒரு அழகனெனும் எண்ணமோ..

ஆம் நிச்சயமாக நம்பிக்கையே..
ஆண் மீதான பெண்ணின் காதல்
அதன் வெளிப்பாடுகள் என்றுமே
அதிநுட்பமானவையே..

கூர்ந்து கவனிக்கும்பட்சத்தில்
மட்டுமே அதை உணர்ந்திட
முடியும்.அப்படி அதை உணர்ததன்
முடிவாய் வந்த நம்பிக்கை..

கடந்த நான்கு ஆண்டு கல்லூரி
நாட்களில் விடுமுறைக்கு வீடு
சென்று திரும்புகையில் அனைத்து
நண்பர்களுக்கு ஒரு பையில்
தீனிப்பண்டமும் இவனுக்கு
தனிப்பையில் தீனிப்பண்டமும்..

நண்பர்களுடன் சேர்ந்து
செல்லும் வெளிப்பயனம்
யாவிலுமே இவளுக்கு
அருகில் அவன் அமர மட்டும்
இடம்போடுவாள்..வேறுயாரும்
வந்து அமரமாட்டார்கள்..
அமரவிடவும் மாட்டாள்..

நண்பர்களே என்றானபோதும்
யாருடன் இருசக்கர வாகனத்தில்
பயனிக்க மாட்டாள்..ஆனால்
இதிலிருத்து அவனுக்கு விதிவிலக்கு..

பெண்களிம் பெரிதாக அவன்
பேசுபவன் இல்லை இவளை
தவிற.இருந்தும் எப்பொழுதாவது
தேவைக்காக பேசினால்போதும்
அவள் அமைதி முகத்தில் ஒரு
சின்ன சோகம் இழைந்தோடும்..

அதுவும் ஒரு அதிநுட்ப
உணர்வே..அதை உணர்ந்து
அவனும் குறைத்திருந்தான்..
அதை அவளும் உணர்ந்திருந்தாள்..

ஒருமுறைக்கூற தெய்வத்தின்
நாட்டிற்கு நண்பர்கள் யாரையும்
அழைத்து செல்லாதவள் இவனை
மட்டும் மூன்று முறை ஒவ்வொரு
காரணம் கூறி வீட்டிற்கு அழைத்து
சென்றிருக்கிறாள்..

படிப்பென்று வந்துவிட்டால் அவள்
கொஞ்சம் சுட்டி தான்..இவன்
கொஞ்சம் சுமார் தான்..அவனுக்கு
மட்டும் நோட்ஸ் எழுதிக்கொடுத்து
அரியரில் அகப்படாமல்
காத்ததும் அவளே..

அன்றொரு நாள் அப்படித்தான்
திடீரென அவளுக்கு மாதவிடாய்..
நேப்கின் எடுத்துவர மறந்த அவளுக்கு
கடையில் போய்வாங்கிவர கூறிட
ஒரேதேர்வானவன் அவனே..

பல நாட்கள் அவனும் அவளும்
அணிந்து வரும் ஆடையின் நிறம்
ஒன்றாகவே இருக்கும்.அன்றெல்லாம்
அவள் சற்று தாமதமாக வந்திருப்பாள்..

அவன் கல்லூரி நுழைவதை
ஹாஸ்டல் ஜன்னலில் இருந்து
பார்த்திருந்தாள் என்பது அவள்
மட்டும் அறிந்த ரகசியமே..

இப்படி எழுதிக்கொண்டே
போகலாம்,அவனுக்காக
அவள் செய்த அதிசயங்களை...

இத்தனை அதிசயங்களை
நிகழ்த்தியவளை அந்த
கடைசி கல்லூரி நாளில்
அவனால் விட்டுவிட
முடியுமா என்ன..?

அந்த நாளின்
மாலை நான்கு மணி..

"கேண்டீன் போகலாம் வா" என்றவளை
அழைத்தான்.பதில் ஏதுமின்றி
நடக்கப்போவதை அறிந்தவள்
போல பின்னே வந்தாள்..

ஜவ்வென இழுக்காமல்
நம்ம கல்யாணம் பன்னிக்கலாமா
என்று நறுக்கென கேட்டுவிட்டான்..

பதிலளிக்காமல் கண்களில்
இருந்து நீர் மட்டும் வந்தது..

அந்த கண்ணீரின் அர்த்தம்
யாதெனில்,இதை கூறிட
இத்தனை காலமா பைத்தியமே
என்பதை அவன் அறிவான்..

மற்றுமொறு காதல் கதையை
தொடங்கி வைத்து நிம்மது
பெற்றது அந்த கல்லூரி வளாகம்..

© பினோய் பிரசாத்