...

10 views

நிஜமான நினைவுகள்
அகவை அரைநூற்றாண்டுடன்
நெருங்க நெருங்க
நாங்கள் மட்டும் நொருங்காமல்
புதுசாக கடலலை வருடும்
தெம்புடன் சிலிர்க்கும் மணல் போல.....

எங்கள் நட்பு கூட
வெள்ளி விழா காணும் களையுடன்
கர்வமாக எங்களை விட
சுறுசுறுப்பான ஒரு நகர்வுடன்.....

நாங்கள் கனவில் கூட
நிஜமாக வாழ்ந்து மகிழும்
ஒரு ஆரோக்கியமான முதியவர்கள்....

அதனால் தான் இருபத்தி இரண்டு
வருடங்கள் கடந்தும்
அதே தெம்புடன் கடற்கரையில்
ஒய்யாரமாக ஒரு உரசலில்.....

சந்தோசங்களை பொறுக்கிக்
கொண்டு அகம் குளிரும்
முகத்தில் புன்னகை தவழ
சூரியக் குளியலில் சோபித்தவாறு......

~ சிரியஸ் ~



© siriuspoetry