...

9 views

கண்ணம்மாவின் காதல்...
அதிகாலை
தென்றல் காற்று
சில்லென்று வீச
காதோரம் உந்தன்
மூச்சுக்காற்று
வெப்பத்தீ மூட்ட
காதலுடன்
காலைப்பொழுது
இனிதே உதயமாக
காத்திருக்கிறாள் கண்ணம்மா...


துண்டு முடித்த
ஈரத்தலையுடன்
தேநீர் கொண்டு
கள்வனையெழுப்ப
காத்திருக்கிறாள் கண்ணம்மா...

கள்வனோ
கள்ளியள்ளி
ஈரக்கூந்தலின்
நீர்த்திவலைகளில்
முகமுரசி
ரசிக்கின்ற பொழுதுக்காக
காத்திருக்கிறாள் கண்ணம்மா...

காலையிலேவா என்று
செல்லமாக கடிந்து கொண்டு
செவிமடல் கடித்து
சிரமப்பட்டு விடுவித்து
சிற்றுண்டி தயாரிக்க
காத்திருக்கிறாள் கண்ணம்மா...

அடுக்களையில் நுழைந்து
அத்துமீறும்
மன்னவனுக்காக
உணவு சமைக்க
மன்னவனோ
சமையலை விட்டுவிட்டு
சமைத்தவளை
உண்ண
காத்திருக்கிறாள் கண்ணம்மா...

கற்பூர ஆரத்தி எடுக்கையிலே
மணாளனுக்கு
மங்கை விபூதி இட
மன்னவனோ தனது
உச்சிவகிட்டில் திலகமிட்டு
நெற்றிப்பொட்டில்
அதரமிட்டு
அலுவல் நிமித்தமாக
பிரிய மனமின்றி
நீ
விடைபெற
காத்திருக்கிறாள் கண்ணம்மா ....


காத்திருக்கும் கள்ளிக்கு
இடையில்
அலைபேசியில்
வரும்
உந்தன் அழைப்புக்காக
காத்திருக்கிறாள் கண்ணம்மா ...

மாலையில்
மாமனிவன் வருகைக்காக
வழிமேல் விழிவைத்து
மஞ்சள்முகத்தோடும்
மல்லிகை சரத்தோடும்
காத்திருக்கிறாள் கண்ணம்மா...

அழைப்புமணி ஓசை கேட்டு
ஆவலுடன் கதவுதிறந்து
கண்ணாளனை
கண்டவுடன்
வெட்கப்புன்னகை பூக்க
காத்திருக்கிறாள் கண்ணம்மா ...


இரவு உணவு முடித்து
வஞ்சிக்காக
காத்திருக்கும்
எத்தனவன்
மடிமீது இளப்பாறி
உடல்வலியும் மனவலியும்
போக்க
காத்திருக்கிறாள் கண்ணம்மா...

உடல்துணைக்காக
மட்டுமல்லாது
உள்ளத்தேவைக்காகவும்
வழித்துணையாகவும்
வாழ்க்கைத் துணையாகவும்
வாழும் மன்னனுக்காக
காத்திருக்கிறாள் கண்ணம்மா...

உள்ளத்தின்
எண்ணங்களை
உதடுகள் உதிர்க்காமல்
முகம் கண்டு
நிறைவேற்றும்
கண்ணாளனுக்காக
காத்திருக்கிறாள் கண்ணம்மா...

கண்ணனுக்காக
காத்திருக்கும் மீரா போல
உனக்காக
காத்திருக்கிறாள்
கண்ணம்மா....

© கவி