...

5 views

பயணம்
பயணம்
ஒவ்வொரு நொடியும் யோசிக்கிறேன் உன்னோடு ஒரு பயணம் வேண்டும் என,
தீரா பயணம் செல்ல தீர்ந்து போக நட்போ காதலோ அறியேன் ஆயினும் அந்த பயணம் நீயும் நானும் மட்டுமே.
நட்பாய் அந்த பயணம் தொடங்கி காதலாய் அந்த பயணம் தொடர உன்னோடு கரம் கோர்த்து, என் கன்னங்கள் சுருங்கி உன் மங்களன பார்வையில் என்னை நீ தேடும் பொழுதில் இந்த பயணத்தின் எல்லைக் கோடு யிட்டு முடிய வேண்டுமே. உன்னோடு நான் மட்டும் கொண்ட பயணத்தின் பதிப்பாய் ஒரு காவியம் அதில் உன் கிறுக்களும் என் ஓவியங்களும் நம் காதலும் கலந்து விட்டு செல்லவேண்டுமே,
தீரா பயணம் தீர்ந்து போகும் நொடியில் கூட உன் கரம் கோர்த்தே தீர வேண்டுமே

© அருள்மொழி வேந்தன்

Related Stories