...

10 views

நீ இருந்தால்
நீ
நிலவாய் இருந்தால்
நான் என்றுமே
உன்னை ஏந்தும் வானமாய் இருப்பேன்,.....
நீ
மேகமாய் இருந்தால்
உன்னை தழுவி செல்லும்
தென்றலாய் இருப்பேன்......
நீ
மழையானால்
நான் உன்னை ஏற்கும்
மணலாக இருப்பேன்.......
நீ
கண்கள் ஆனால்
அதன் பார்வையாக இருப்பேன்......
நீ
இதயமானால்
உந்தன் துடிப்பாக இருப்பேன்.......
நீ
உலகமானால்
அதில் என்றுமே வாழும்
இயற்கையாக இருப்பேன்.....
© Megaththenral