...

16 views

பாஸ்போர்ட் சைஸ் தேவதை
ஆயிரமாயிரம் புகைப்படங்களை
கொண்ட செல்பேசிகளை விட..
ஒற்றை பாஸ்போர்ட் போட்டோ
சுமந்த பர்சுகள் அழகானவையே..

அந்த புகைப்படமோ மோனலிசா
ஓவியம் போன்றது.அவள் கோபம்
கொண்டாலோ,காதல் கொண்டால
அதுவாகவே அதுவும் பார்த்ததென்னை..

அந்த படத்தை மட்டும் வரையும்
ஓவியனுமானேன்..ஆனால்
வரையப்பட்டது அவள்தானென்று
அவளே அறிய முடியா ஓவியமாகும்..

அருகில் அவள் இல்லா வேளையில்
அந்த புகைப்படம் என்னிடமும்,நான்
அந்த புகைப்படத்திடமும் பேசிய
வார்த்தைகள் அவளுமே அறியாதவை..

அவளை வைத்த கண் வாங்காமல்
பார்க்க ஆசையிருந்தும்,நடக்காத
வேளைகளில் நான் பார்க்கும் வேளை
எனையும் பார்க்கும் செல்லமும் அதுவே..

நான் கொடுக்க வந்த முந்தங்களை
எல்லாம் தடுத்தனுப்பும் அவளாலே..
பற்பல முத்தங்கைளை அமைதியாக
வாங்கிக்கொண்டு அழகியுமிவளே..

எல்லாம் முடிந்து எதுவுமில்லா நிலையிலே
வெவ்வேறு வழியினில் எங்கள் வாழ்க்கை
போய்விடவே,இன்றும் என் பர்சுக்குள்
எட்டிபார்க்கும் பாஸ்போர்ட் சைஸ் தேவதை..
© பினோய் பிரசாத்