...

7 views

நெஞ்சில் மாமழை..
நெஞ்சில் மாமழை
நிமிடம் உனை
எண்ணும் போதே..
சொல்லவியலாத
கணக்கிலடங்கா
களிப்புகள் ஆயிரம்..
கணிப்புகள் தோற்கும்
அந்த நொடி
அப்படியே நீளாதோ..

எந்தன் பைங்குருவியே..
எந்தன் பூஞ்சாரலே..
எந்தன் தேனமுதே..
எந்தன் காரிகையே..
எந்தன் தனிநிலவே..
எந்தன் இயற்பொருளே..
எந்தன் மாமழையே..

இருள்சூழ்ந்து
படையெடுத்து வரும்
மேகக்கூட்டத்திற்கு..
மத்தியில் பிரகாசமாய்
பிரமிப்பாய் நிற்குமவள்
தோரணை.. கண்டே
வான்மகளும் வெம்மி
அழுதே தீர்க்கிறாள்..
ஆருயிரே உந்தன்
மேனியில் பட்டாவது
பரவசமாகலாம் என்று..

பறவைகளும்
விலங்குகளும்
பம்மி பதுங்குதே
மாமழையை கண்டே..
பதுமை நீயே..
புதுமை செய்தாய்..
மழையில் நனைந்தே..
பேரழகை காணவே..
கண்கள் தான் போதுமா..
காட்சியதை நிறுத்தி
என்றும் ருசித்து ரசிக்கவே
என்னாலும் இயலுமா..
...