ஓய்வறியா உழைப்பாளி #அப்பா
*ஓய்வு இவரிடம் உழைப்பை கற்றுக்கொண்டிருக்கின்றது.
*இவா் எழுவதையே விடியல் தனக்கான, சரியான நேரமாக மாற்றிக்கொண்டது,
*சேவலை பஞ்சாரத்தில் இருந்து எழுப்பி விடுவதும் இவரே.
*அலாரத்தின் அலாதி ஆசை, நாம் இவரை ஒரு நாளாது எழுப்பி விட வேண்டும் என்பது.
*பால்காரா் மணியடித்து எழுப்பி விடுவதே இயல்பு, ஆனால் இவரோ பால்காரருக்கே அழைப்பேசி மணி அடித்து, இன்று தாமதமா என வினவுவாா்.
*எங்கள் வீட்டு சூரியனுக்கு, அசதி நேரமோ ஐந்து மணி நேரம் தான், ஆதவன் கூட அவன் விழித்த பிறகே வருவான், அவன் விழித்திருக்கும் நேரமே மறைவான்.
*நாளிதழ் படிக்கவே மூக்குக்கண்ணாடி அணிந்திடுவான், விழித்திருந்த நேரங்கள் எண்ணிலடங்கா என்பதால்.
*பாதத்தின் ரேகைகள் எல்லாம், அவனிருந்த ஊரெங்கும் பதித்திருப்பான், அருந்த செருப்பை, தைக்கவே முடியாது போனால் தான், அடுத்த ஒன்றை வாங்க யோசிப்பான்.
#அப்பா
© முகமூடி ௮ணியாதவன்