...

23 views

காதல் தாசன்
#செல்லக்கண்ணம்மா

சித்திரம் என்றுனை சொல்லிவிட்டு நகர்வதா?
பார்த்து பத்திரம் அழகுகள் என எச்சரித்து அனுப்புவதா?

கற்சிலை என்றுனை சொல்லிவிட்டு நகர்வதா?
பார்வை உளிகளைப் பார்த்து நட என எச்சரித்து அனுப்புவதா?!

கற்பனை என்றுனை சொல்லிவிட்டு நகர்வதா?
கம்பன் கண்ணில் பட்டுவிடாதே
என எச்சரித்து அனுப்புவதா?!

கவிதை என்றுனை
சொல்லிவிட்டு நகர்வதா?
யாருக்கும் மனப்பாட பகுதி ஆகிவிடாதே
என எச்சரித்து அனுப்புவதா?!

ஸ்வரங்களின் சங்கமம் என
சொல்லிவிட்டு நகர்வதா?
ஒலிபெருக்கியில் ஒலிப்பரப்பாதே
என எச்சரித்து அனுப்புவதா?!

நிலவின் ரசிகையடி நீயென
சொல்லிவிட்டு நகர்வதா?
காத்திருக்கச் செய்து தேயவிடாதே
என எச்சரித்து அனுப்புவதா?!

காதல் நீதானே என
சொல்லிவிட்டு நகர்வதா?
மோதி மோதி சோதிக்காதே
என எச்சரித்து அனுப்புவதா?!

சொல்லி சொல்லிப் பார்த்தாலும்
சொல்லிவிட்டு சட்டென
நகரமுடியுமா என்னால்…?;

எச்சரித்தல் என்றாலும்
பூவிதழ் தூவல் போலத்தானே
செய்ய முடியும் என்னால்…!

விழிகளை விட்டு நகரா இமைபோல்
உந்தன் அருகில் நானிருப்பேன்
உன் நாணம் எல்லாம் அணிந்துக் கொண்டு
காதல் தாசனாய் வீட்றிருப்பேன்!