...

1 views

கல்லூரி சாலை
அது ஒரு கல்லூரியின் வாயில் வரை தொட்டு,அப்படியே அடுத்தடுத்த ஊர் வரை சென்றிடும் ஒரு தார் சாலை..

அந்த கல்லூரியை தொட்டுச்செல்லும் அந்த ஒற்றை காரணத்தினாலே அது செல்லமாக கல்லூரி சாலை என்றானது..

கல்லூரியின் விடுமுறை நாட்களில் மட்டும் சற்று மந்தமாக காணப்பட்டும் மற்ற நாட்கள் ஜொளிஜொளிப்பாக காணப்படும்..

அந்த சாலைக்கு மட்டும் கொஞ்சம் கவனிக்கும் ஆற்றல் இருக்குமேயானால்
அதைப்போன்றொரு ஞானி யாருமில்லை..

நட்பென்றும் காதலென்றும்..
கோபமென்றும் சண்டையென்றும்..
படிப்பென்றும் துரோகமென்றும்..
தன் மீது பயணிப்பவரின் பலநூறு
பரிணாமம் கண்டதிந்த சாலை..

முதல் வருட கல்லூரியில் காதல்
மொழி பறிமாறிய அந்த ஜோடி
பிரிந்து,அதே மொழியை
அதிலொருவர் வேறொருவரிடம்
கூறிட கேட்டதுண்டு அந்த சாலை..

முதல் நாள் இட்ட சண்டையின் தொடர்சியாய் சாலையின் இருபுரத்தில் அவளும் அவனும் ஒரீரு நாட்கள் நடந்தும்..

காலில் விழாத குறையாய் அதில் ஒருவர் செய்யும் சமாதான முயற்சியில் மீண்டும்
ஒரே புறத்தில் நடப்பதும் நடக்கும்..

நண்பர்களின் கூட்டங்கள்
இன்னொரு பக்கம் அந்த
சாலையையே தனதெனும்
உரிமையாய் கொண்டு
முற்றுகையிட்டு நடப்பதும்
தினமும் அங்கு நடக்கும்..

எவராயினும் அடுத்த
மூன்றல்லது ஐந்தாண்டில்
அடங்கிடுவர் என்பதை அறியாது.

நண்பனுக்கென்று இருபெரும்
அணிஎதிரெதிர் நின்று முறையாக அடித்தும் அடிவாங்கியும் செல்வதை பார்த்ததுண்டு இந்த சாலை.

இறுதிவரை எதற்கான சண்டையென அறியாமல் நண்பன் என்ற அந்த
ஒற்றை சொல்லுக்காக..

அடிதடிகள் ஒருபுரம் இருக்க மறுபுறம் மன்மத ரோமியோக்களும் இருக்காமல் இல்லை இங்கே..
அவர்களி்ன் அதிக நேரத்தை
அடைந்தது அந்த சாலையின்றி வேறில்லையே..

முதல் பட்டதாரிகளும் இன்னும் சில படிப்பதே நோக்கமென வருபவர்கள் தன் மீது செல்லும் அந்த வேளையிலே சற்று பெறுமையும் கொண்டதந்த சாலை..

எல்லாம் ஒருபுறம் இருந்தாலும் யாராலும் அந்த சாலையை உரிமை கொண்டிட முடியாத பேரழகி தான் அந்த சாலை..

அதிகபட்சம் அந்த சாலையில் அவர்கள் இடும் ஆட்டமும் பாட்டமும் மூன்றல்லது
ஐந்தாண்டில் அடங்கிடவேண்டிவை தானே..

ஏதோவொரு நாளில் இந்த ஆண்டை தாண்டி யாரும் வந்து நின்றால் ஒருதுளி கண்ணீரை அந்த சாலை வாங்கிடும்..

இப்படிப்பட்ட இந்த சாலையின் சொந்தங்களான இளங்கண்று
யாவும் பயமின்றி வேகத்தால்
இரத்தக்கரை பல படிந்தது
மட்டும் அந்த சாலையின்
சாபம் ஆனது..

கல்லூரிச்சாலையின்
கரைத்துடைப்போம்..
தலைக்கவசம் அணிந்தபடி..



© பினோய் பிரசாத்