...

27 views

பாரதிரப்பாடிய பாரதி
நின் கவிதையால்
தமிழ் கூர்மை பெற்றது...
இலக்கியம் எழுச்சி பெற்றது
அரசியல் தீப்பற்றி எரிந்தது

பாரதிரப்பாடிய நீ
பார் விட்டுப் போனாய்...
இறந்து போன உன்னை
மறந்து போனது தேசம்...

உன் உடலில் மொய்த்த
ஈக்களின் எண்ணிக்கை கூட
இல்லையாமே....
உன் இறுதி ஊர்வலத்தில் ஆட்களின் எண்ணிக்கை....

நன்றி கெட்ட உலகமிது...
இன்னும் திருந்தவில்லை
தெருவுக்குப் பத்து
நாய்களிருந்தும்...

© வேல்முருகன் கவிதைகள்

Related Stories