...

5 views

பிறை தேடும் இரவிலே🖤

ஒவ்வொருவரின் இரவுக்கும் ஒரு தனி இயல்பு உண்டு, எங்கேயோ எப்போதோ விருப்பமற்று திணிக்கப்பட்ட எத்தனையோ சம்பவங்கள் நினைவுருவமெடுத்து துரத்துவதாகவோ அல்லது எதிர்காலத்தின் எதிர்ப்பார்ப்புகளோடு
கனவுகளை கண்களில் சுமந்து சுகமாக இருளைச்சுருக்கி இறுக பிணைக்கப்பட்ட இமைகளுக்குள் இன்பம் நுகர்வதாகவோ இப்படி பல வகைகளில் பயணிக்கிறது இந்த இரவு.எப்படியோ வரவழைக்கப்பட்ட தூக்கத்தைக்கூட வலியச்சென்று வம்பிழுத்து விரட்டும் நினைவுகளுக்கெல்லாம் இரக்கமற்ற இந்த இரவுதான் இருப்பிடம்,காதலிப்பவர்களைப் பற்றி இங்கு எதுவும் தனியாக குறிப்பிட வேண்டாமா?
வேண்டாம் என்பதை விட முடியாது என்று சொல்வதுதான் இங்கு முற்றிலும் பொருத்தமாயிருக்கும்
தூக்கத்திடமிருந்து இரவை இரவல் பெறும் அவலம் அவர்களுக்குத் தானே ஏற்படுகிறது!
கவிதைகளுக்கெல்லாம் காரணகர்த்தாக்களாக பெரும்பாலும் இந்த இருண்ட காலமே இருந்துவிடுகிறது,காலத்தின் கதறல்கள் எல்லாம் இங்குதான் எல்லைவகுத்து சூழ்கின்றன, சூழ்ச்சிகளில் சிக்காமல் சூதானமாய் அடியெடுத்தேன் , சற்று ஆறுதல் அடையும் வேளையில் சட்டென நிகழ்ந்தது மின்வெட்டு.......
பாவம் அவர்களும் என்ன செய்வார்கள், பணப்பட்டுவாடா நடக்க வேண்டுமே !!!!