...

6 views

துரத்தும் நினைவுகளும் தொலைந்து போகும் நெஞ்சங்களும் 💕
துரத்தும் நினைவுகளும் தொலைந்து போகும் நெஞ்சங்களும்

காயம் கண்ட மனமதை தேற்றிக்கொள்ள மருந்தில்லை
தாபம் கொண்ட உயிரதை மாய்த்துக் கொள்ள வழியில்லை

அவள் பிரிவே முதல் துயராய் அவள் நினைவே முதல் பிழையாய்

வெட்க்கம் துடைத்தவள் இன்று கண்ணீர் துடைக்க்கிறாள்
கண்ணாளனின் கருவிழிக்குள் அமர்ந்துகொண்டு

மூச்சுக் காற்றின் ஒரு நொடியில் முன்னூறு ஜனனங்கள்
இதயத்துடிப்பின் ஒரு வலியில் எண்ணூறு மரணங்கள்

ஓர் உடலுக்குள் ஆயிரம் ஜனனம் ஆயிரம் மரணம்

தேய்ந்த வெண்ணிலாவை எதிர்பார்க்கும் சூரியன்
வருடமெல்லாம் அமாவாசை இரவுகள்

காத்திருந்து காத்திருந்து கண்களுக்குள் பவுர்ணமி
போய் பூசிய கற்பனைக் காட்சியாய்

வாடும் சூரியனின் வாட்டம் அது கிழக்கில் உதித்து மேற்கில் மடிகிறது
அவள் நினைவுகளை உலகெலாம் தூவி !
© Iy Thamizhanda