...

2 views

இனி ஒரு விதி செய்வோம்
தடைகளை உடைப்போம்
வம்பானவர்களை புறக்கணிப்போம்
நம்பிக்கையை விளைய செய்வோம்
வெற்றியை அறுவடை செய்ய
இனி ஒரு விதி செய்வோம்,

மெய்யை பேசுவோம்
பொய்களை தவிர்ப்போம்
பகைமையை ஒழிப்போம்
நட்பூக்களை பெருக்கிட
இனி ஒரு விதி செய்வோம்,

ஒற்றுமை செய்வோம்
இயற்கை காப்போம்
பசுமை உலகம் படைப்போம்
மாசற்ற காற்றை சுவாசிக்க
இனி ஒரு விதி செய்வோம்,

மானிடர்க்கெல்லாம் புத்தி போதிப்போம்
நன்மை தீய்மை எடுத்து உரைப்போம்
மனதின் மாயையை அறிய செய்வோம்
பாவம் இல்லாத வாழ்கையை வாழ
இனி ஒரு விதி செய்வோம்,

ஏழ்மைகளை அகற்றுவோம்
ஏழைகளை காப்போம்
நீர் வளம் பெருக்குவோம்
ஏர் பிடித்துழுபவர் உயர்ந்திட
இனி ஒரு விதி செய்வோம்,

அகந்தையை அகற்றுவோம்
அறியாமையை நீக்குவோம்
வலிகளைத் தாங்குவோம்
சித்தம் கலங்காமல் இருக்க
இனி ஒரு விதி செய்வோம்,

மாற்றத்தை தேடி
எண்ணங்களை தீட்டுவோம்
ஏற்றங்களை பெற்றிட
சங்கடம் இல்லாத வாழ்க்கை பெற்றிட
இனி ஒரு விதி செய்வோம்,

கையூட்டு தடுப்போம்
பேதம் தவிர்ப்போம்
சாதி மதம் ஒழிப்போம்
ஆண்/பெண் சாதியிரண்டே என்றுரைக்க
இனி ஒரு விதி செய்வோம்,
- சங்கத்தமிழன் மணி.