...

12 views

மனதுக்கு மட்டும் !
ஒரு கோப்பைத் தேநீர்

செய்த மாயம்

கொஞ்ச நேரத்தில்

தலைவலிக்

காணாமல் போச்சு !

.........

சின்ன இதழ் புன்னகை

செய்த மாயம்

கொஞ்ச நஞ்ச கஷ்டம்

போயே போச்சு !

..............

ஆதரவான தலை கோதல்

செய்த மாயம்

ஆர்பரித்த மனம்

அமைதியாச்சு !

..............

மிகச்சிறிய அதட்டல்

செய்த மாயம்

சண்டை யெல்லாம்

விலகிப்போச்சு !

................

உண்டியல் சேமிப்பு

செய்த மாயம்

சுற்றுலாவுக்கு

அடித்தளமாச்சு

................

இந்த,

அநுபவங்கள்,

எதில் அதிகம்?

கூட்டுக் குடும்பத்திலா?

தனிக் குடும்பத்திலா?

இல்லை

உங்கள் குடும்பத்திலா?

எங்கள் குடும்பத்திலா?

நாம் ஒன்றாய்ச் சேர்ந்து

வாழ்க்கையை ஒரு கைப்

பார்ப்போமா?

© s lucas