...

5 views

யார் நான்
இப்படியே
பார்த்துக்கொண்டே
இரு
நானும் அசைவதாக
இல்லை
கயல் விழியால்
இதயத்தை
துள்ளவிடுகிறாய்
தூண்டில் என
அறியாமல்
சிக்கிக்கொண்ட
சின்னமீன் நான்
உதட்டுச் சிரிப்பில்
உளவியலை
உணர்த்தி விடுகிறாய்
சரிந்த கூந்தலை
முடிந்துவிடாதே
சிக்கலற்ற நிலைதான்
மனதை பிரபஞ்சமாக்கும்
நீ கட்டிய பிறகுதான்
சேலைக்கே
உன் பெயர் மொழியப்படுகிறது
அதை காரணம் காட்டித்தான்
உன் பெயரை முணுமுணுத்துக்
கொண்டிருக்கிறது என் நா
என்னை பைத்தியம் என்கின்றனர்
எப்படித் தெரியும் அவர்களுக்கு
நீதான் அதற்கான
காரணம் என்று
© MASILAMANI(Mass)(yamee)