...

3 views

தாயுமானவன்
ஏழு பெண்களைத் தாண்டி,
எட்டாம் பிறப்பானான்,
அவளின் அன்பான "ஆண்"பிள்ளை
அவனைப் பெற்றவளுக்கு
மட்டுமல்ல;
அவனுடன் பிறந்த ஏழ்வருக்குமே அவன்
" மகன்" தான்!
சீராட்டி பாராட்டி வளர்க்க
அவன் பிறப்பால்
செல்வந்தன் இல்லை!
மனதால் செல்வந்தன்!
மட மட வென்று
வளர்ந்தான்! பலரின்
ஏசலுக்கும் பூசலுக்கும் நடுவே!
கிழிந்த சட்டையில்
பள்ளிக்குப் போனாலும்,
படிப்பில் என்னவோ கெட்டிக்காரன் தான்!
பக்கத்து மேஜை பையனுக்கு
பருப்பி விற்றாலும்;
கணக்கு வாத்தியாருக்கு
கச்சிதமாய் விடை கொடுப்பான்!
தரையை நம்பி தனியே நடப்பான் வெறும் காலில்!
கனவுகள் பல இல்லை அவனுக்கு!
'பணம் " மட்டுமே அவன் கண்ட முதல் கனவு!
"வழி" தேடி அலைகிறான்!
வழி நெடுக நண்பர்கள் கூட்டம்;
பழக்கங்கள் பல கற்றான்!
நல்லவையும் தீயவையும் சேர்த்து!
நாட்கள் கடந்தன;
வயதும் கடந்தது;
அவன் தந்தை இறந்தார்!
தாயுடன் நின்றான்
தனிமரமாய்!
தாயோடு சேர்ந்து
தோளில் சுமந்தான்
"வெள்ளைப் பூண்டு"
வியாபாரத்தை!
அதில் ஆரம்பித்து அவன்
செய்த தொழில்கள் ஏராளம்!
"அன்றிலிருந்தே!
தோல்வியில் துவழாதவன்!
வெற்றியில் நெகிழாதவன்!"
தன் வாழ்க்கையை எதிர்நோக்கி நித்தமும் ஓடியவன்;
தனியாய் ஓடியவன்
துணைவியாய் மணந்தான்
ஒரு குணவதியை!
" மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்;
கணவன் அமைவதெல்லாம் காலம் செய்த தவம்"என்றால் ,
இவர்களின் வாழ்க்கைக்கு
அது மிகையாகாது!
இருவருக்கும் அழகாய்
இரண்டு "பெண்" பிள்ளைகள்:
காலங்கள் ஓடியது;
கடின உழைப்பால் அவன்
கனவுகளும் நிறைவேறியது!
அவன் இளம் வயதில்
குறும்பானவனானாலும்,
அவன் "மகள்களை" வளர்ப்பதில்,
அவனை விட சிறந்த தந்தை
இவ்வுலகில் இல்லை!
அவன்
"தாய்"க்கு சிறந்த "மகன்"
"தமக்கை" களுக்கு சிறந்த "தமையன்"
" துணைவி" க்கு சிறந்த "துணைவன்"
"பிள்ளை"களுக்கு சிறந்த" தந்தை"
மொத்தத்தில் இவனை சூழ்ந்தவர்களுக்கு இவன்
"தாயுமானவன்"


© ❤நான் வாணி ❤