அவளதிகாரம்
எப்படி கூறுவது கூற வேண்டும் என முடிவான பின் எப்படி மறைக்க முடியும், முதலில் இரு விழியில் விழுந்த நொடியில் கரைந்த என் இதயமும், உன் இரு இமைகள் அசைந்தாடும் பொழுதுல் வரைந்த ஓவியமும், மூக்கின் நுனியில் நான் மோதி சாகிறேன் இதழ் சிரிப்பில் என்னை சிதைத்து சிறையில் என்னை புதைத்து, அனு அனுவாய் நான் தவிக்கிறேன். நின் நினைவுகள் என்னை சூழ எங்கோ ஒரு முறை கண்ட உன் நினைவலைகள் கொண்டு வதம் செய்வது ஏனடி நானும் ஏற்கிறேன் தவிக்கிறேன் திகைக்கிறேன் தீர்ந்து போகா உன் நிழல் அருகில், மொழி பேசும் உன் குரல் கேட்க ஆசையாய் காத்திருக்க, மௌன பாஷை பேசி மெல்ல நடந்து செல்லும். உன்னிடம் எதை பற்றி நான் கேட்க, நொடி பொழுதில் பல பாவனை செய்யும் உன் வதனம் கண்டு வியந்து போகும் என் நெஞ்சத்திடம் கதைகள் சொல்லி உறங்க வைக்க படும் பாடு, என் அறிவும் உன் வசம் வர இரண்டும் உன்னிடம் அடிமை சாசனம் எழுதி வைத்ததோ, எங்கோ தோன்றிய செங்கதிர் என் மீது விழும் பொழுதில் குளிர்ந்த பனி போல் என்னை தழுவி செல்லும் உன் நினைவுகள்...