...

5 views

யாருமற்ற உலகம்
யாருமற்ற உலகம் வேண்டும்
என் மீது நம்பிக்கை கொண்ட நீ மட்டும் போதும் அவ்வுலகில்
கவலையை தூரம் நிறுத்தும் உன்
அருகாமை போதும்
என் விழிகளில் சிறு தூசி விழுந்தாலும் கலங்கும் உன் விழிகளில் தெரியும் அன்பு போதும்
சில்லென்ற காற்றில் தலை சாய உன் தோள்கள் போதும்
இரவில் பயமின்றி உறங்க உன் கதகதப்பு போதும்
எனக்காக எப்போதும் நீ துடிக்கும் துடிப்பு போதும்
என்னை எனக்காக நேசிக்கும் உன் ஒருவனின் பாசம்
போதுமடா
சொல்ல தெரியா பரவசம் உன்னால் என்னுள் ஏற்படும் போது
நித்திரையிலும் உணர்கிறேன் உன் அருகாமையை
இது போதுமே என் வாழ்வின் கடைசி நொடி வரை....




© All Rights Reserved