...

2 views

இது தொடருமோ? வேண்டாமே!
இந்த பாதை எங்கே செல்கிறதோ, அறியேன் நான்,
மேலும் உன்னோடு இந்த பயணம் வேண்டாம்,
வேண்டாம் என சென்ற உன்னால் எப்படி மீண்டும் என்னை தேடி வர முடியும்,
தேடல் முடிந்து கண்கள் எல்லாம் நீரற்ற பாலைவனம் போல மாறிவிட,
இவளும் பல கதைகள் கதைக்கிறாள்.
எல்லாம் மனதில் ரணமாய் இருக்கும் இந்த காதலில் மீண்டும் எப்படி மனம் ஒன்றாய் சேரும்,
காதல் தான் வலி என்றால்
அவளின் நினைவுகள் எல்லாம் ஆறாத வடுவாய் தஞ்சம் அடைந்த பொழுதில். என்ன செய்வது
காதல் செய்த மனம் அல்லவா தீராத நினைவுகள் மட்டுமே சூழ்ந்து கொண்டு என்னிடம் மீண்டும் ஒரு முறை ஏமாற மனம் இல்லை. இந்த தொடர்கதை எப்பொழுது முடிந்து போனதோ அப்போதே நானும் ஜடமாய் மாறினேன்,
இந்த பாதை தொலைதூரம் சென்றால் போதும் நீ மட்டும்,
தொடரவேண்டாம் என்ற எண்ணம் மட்டும் பச்சைமரம் மீது பதிந்த ஆணி போல,
நெஞ்சத்தில் இறங்கி போன உனது நினைவுகள்,
தீரா விஷமாய் என்னை தினம் தினம் கொள்ளும் பொழுதில்,
அறிந்தேன் இந்த காதல் எப்பொழுதும் எல்லோருக்கும் தேவையான முடிவை கொடுப்பதில்லை என.

© அருள்மொழி வேந்தன்

Related Stories