...

8 views

முதுமையிலும் முடியா காதல்..!
ஆண்டுகள் கடந்துவிட்டன ,
அகவையும் கூடிவிட்டன..

பார்வை கூட மங்கிவிட்டது
பாதைகளும் தடுமாறுகிறது..

உடல் நடுக்கமாகிறது
உயிர் ஒடுக்கமாகிறது..

ஆனால் - உன் கையை
பிடித்த பிடி ;
இறுகிக்கொண்டேதான் போகிறது...

நம் காதல் -
கசியுமளவு
வசியமாயே உளது...

உடலிரண்டாய் ;
உயிரொன்றாய் ;
இதயமிரண்டாய் ;
அதிர்வொன்றாய் - நீளும்...!

இந்த - முதுமை கடந்த
பக்குவம் படர்ந்த
முதற்காதல்..!

#vinaykrishg #writcotamil #yqwriter
#tamilquotes #lovequotes #love&love #fantasy #காதல் #முதுமை #oldagelove

© vinaykrish g