...

3 views

என்று தணியும் ஏழைகளின் தாகம்
என்று தணியும் இந்த ஏழைகளின் தாகம்?
என்று பிறக்கும் இங்கு மக்களின் கட்சி?
என்று ஒழியும் இந்த ஊழல்கள் ஆட்சி,

என்று மாறும் வறுமையின் காட்சி?,
என்று வருமிந்த அரசியல்வாதிகளுக்கு வீழ்ச்சி,
என்று கிடைக்கும் உழவர்களுக்கு மாட்சி,

நஞ்சையும் புஞ்சையும்
செழிப்பிழந்து போச்சி,
கயவர்களின் ஆட்சியில்
மும்மாரியும் மாறிப்போச்சி,
ஊரெல்லாம் திருடர்களின் பேச்சி,

அரசாங்கமே பொய் உறுதியில் ஊறிப்போச்சி,
கழனி உழும் கழுப்பையெல்லாம்
குழித்தோண்டிப் புதைசாச்சி,
காடு இருந்தும்
கஞ்சிக்கே திண்டாட்டமா போச்சி,

ஏழைகளின் வாழ்வு
எந்த அளவும் உயரவில்லை,
விலைவாசிகளின் உயர்வுக்கோ
கொஞ்சம் கூட கருணையில்லை,

அரசியல்வாதியாய்
பிறந்து இருந்தா
ஐந்தாறுமாடி கட்டியிருப்போம்,
ஊருக்கொரு சாராய
ஆலை திறந்திருப்போம்,
அயல்நாட்டிலும் முதலீடு
கொண்டுபோய் கொட்டியிருப்போம்,

என்ன செய்ய
ஏர் உழுது
வாழவே பிறந்தவர்கள் நாங்கள்,
இங்கு
எதனை பேசி
என்ன ஆகப்போகுது போங்கள்,

நாளை
விடியட்டும்
நல்லமழை பொழியட்டும்
எங்கள் வாழ்வும் உயரட்டும்
ஏழைகளின் தாகம் தணியட்டும்
என்றும் நல்ல உள்ளம் வாழ்த்தட்டும்.
- சங்கத்தமிழன் மணி