...

3 views

அவள்
எப்படி வர்ணிப்பேன் அவளை,
காலை விடியல் வான் மெல்ல கண் விழிக்கும் பொழுதில் அவள் இமை திறந்து மௌனம் கலைக்க அவளின் இதழில் ஒரு புன்னகை பூக்கும், மலர்களும் தோற்றுவோடும் அளவில் அவளின் வதனம் இருக்க வான் மேக கூட்டம் எல்லாம் ஒன்றாய் அவள் வீட்டை சுற்றி மிதந்து செல்ல,
செங்கந்தால் மலர் அவளின் இரு விழியின் ஓர பார்வை மீட்டாதா என ஏக்கம் கொண்ட செல்ல இவளும் தாமரை இலை மேல் நீர்த்துளி போல் முகம் கழுவி ஒரு கோப்பை குளம்பி கொண்டு கதைகள் வாசிக்கும் அவளின் இதழில் விழுந்த நொடிகள் ஏராளம்,
கதிரவன் அவள் இமை மீது விழும் பொழுதில் அவளின் அவசர அவசர மாய் தன்னை அலங்கரித்து கொண்டு இருக்க,
என் செய்வேன் நான் அடுத்து அவளின் வருகைக்கு எடுத்து வைத்த வார்த்தைகள் எல்லாம் காணாமல் போனதை அறிவாயோ,
நீல நிற வெண்ணிலவாய் அவளும் புடவையில் வர காதோரம் கவி பாடும் லோலாக்கும் பேசிய வரிகளை ஒவ்வொன்றாகோர்த்து நான் கேட்க என்னை மிரட்டும் ஓசை என அறிந்தேன்,
பொற்பாதம் தீண்டி விடாதா என ஏங்கும் மணல் மேடு போல் என் இதயம் காத்திருக்க...
அறிந்தும் கடந்து செல்கிறாள் வான்மகள்
© அருள்மொழி வேந்தன்

Related Stories