...

6 views

நம் அசல்களை ஈன்றெடுக்க
தீராத யுத்தம் போல்
ஓயாத முத்தம் தா
காதல் நோய்க்கு மருந்தாக
இன்று நாளை நித்தம் தா,

புறமெல்லாம் ஊதல்
பனிக் காற்று சுழற்றுகிறது
அகமெல்லாம் நெருப்பு
கோளமாய் கொதிக்கிறது,

கண் விழியோ விடிய விடிய
உன்னையே தேடுதடா
ஆடைக்கூட அங்குமிங்கும்
விலகி ஓடுதடா,

என் இளமைக்கு
வயசாகும் முன் வருவாயோ
என் ஏக்கத்தின்
தாகத்தை தீர்த்து விடுவாயோ,

முழுமதியாய் நானிருக்க
ஆதவனாய் நீயிருக்க
உன் இதயத்தை
உயில் எழுதி தருவாயா,

குங்குமமும் பொட்டும்
நெற்றியில் வைத்து விடு
இதழை அருந்தி
இன்பத்தின் எல்லை தொட்டு விடு

சிற்பிகள் செதுக்கிய
சிலையழகி என்னுள்
பதுங்கி இருக்கும்
மோகங்களை எழுப்பி விடு

உனக்கு மட்டும்
வேண்டியதை தேடாதே
உனக்கு பிடித்த என்னை விட்டு
வேறொருவரை நாடாதே,

இன்னும் எத்தனை நாள்
இப்படியே ஒதுக்குவாய்
பளிச்சிடும் என்னழகை
எதற்குதான் பாதுகாப்பாய்,

காலனாய் வந்தென்னை
கொன்று விட்டு போ
கொடூர மிருகமாய் - என்னை
தின்று விட்டு போ,

நாளை என்பது
நிரந்திரமில்லை இன்றே வா
நீயும் நானும் சேர்ந்து
நம் அசல்களை ஈன்றெடுக்க.
-சங்கத்தமிழன்