...

9 views

இதழ்
இதழ் விரித்து பூத்திடும் பூக்களுக்கு தெரியாது
அவள் புன்னகை தான் அழகு என்று,
கண்களில் கவி புனையும் அவள்
இமை அசைவில் சொல்லிடுவாள் காதலையும்,

மின்னிடும் காதணிக்கு தெரியாது
அவள் மின்மினி என்று,
சிவந்த கன்னங்களில் விழும் குழியைக்கண்டு
காதலில் விழுவதே என் வேலையாயிற்று,

பளிச்சிடும் மூக்குத்தி கற்களோ
அவளிடம் என் மனதை ஒப்படைக்க சொன்னது,
அவள் பேசும்போதெல்லாம் பேரின்பம் கொள்ளுமே
பித்து பிடித்த என் மனது.
© All Rights Reserved