நட்பென்னும் விழா....
பெயர் அறியா...முகம் அறியா...இனம் அறியா..
இருமுகம் ஓர் நாள் கண்டுகொண்டதே...
நட்பென்னும் விழாவில் தன்னை அறியா கலந்து கொண்டதே...
துன்பங்களை எல்லாம் தூரதள்ளி...
துவண்ட மனதிற்கு தோள் தந்ததே...
காணாத ஆசைகளை களைப்பில்லாமல் கண்டு கொண்டதே...
அதில் செய்யும் தவறுகளை திருத்தி தலையெழுத்தை மாற்றி கொண்டதே...
வேடிக்கையான ஆசைகளும் இங்கு விண்ணப்பம் ஆனதே...
அதை முடிக்கும் வேதனையும் இங்கு வேடிக்கை ஆனதே...
சண்டைகள் நட்பிற்கு சாட்சியானதே...
அன்பிற்கு அதுவே சங்கல்பமானதே...
உதவி என்னும் வார்த்தை ஒதுங்கி சென்றதே...
அதன் நண்பன் நன்றியையும் அதனுடன் அழைத்து சென்றதே...
சண்டை என்னும் ஒருவன் விருந்தினர் ஆனானே...
சமாதானம் என்னும் அவன் எதிரியும் உடன் சேர்ந்து வந்தானே...
மகிழ்ச்சி என்னும் உணவு உண்டானே...
மனக்கவலை என்னும் பசியை தீர்த்தானே....
வாழ்வில் கண்ணீர் எல்லாம் கடனாய் ஆனதே...
அதில் நட்பின் ஆனந்த கண்ணீர் அள்ளி அணைத்ததே...
ஒளியும் ஒலியும் ஆனதே...
உண்மையான உணர்வானதே...
அந்த உணர்வுகளை மறைக்க/மறக்க இயலா ஆனதே...
கண் முன் நிற்கும் கண்ணாடி ஆனதே...
கண்களை பார்த்து நம்மை அறியும் காவியமானதே...
விரும்பாத புத்தகத்தின் விரும்பிய பக்கம் ஆனதே...
விருந்து உணவில் விரும்பிய உணவாய் ஆனதே...
வேர்வையில் வீசும் தென்றல் காற்று ஆனதே...
வீசிய காற்று நட்பின் வாசம் சேர்ந்ததே...
சேர்ந்த வாசம் உயிர் சுவாசம் ஆனதே...
சுவாசம் தினந்தினம் கொண்டாடும் விழா ஆனதே...
அது என்றும் எனக்கு இன்றியமையாதானதே....
சிரிப்பும் கண்ணீருமாய் நீயும் நானும் சேர்க்கையில் மாறுவோம் ஆனந்தகண்ணீராய்...
என் நட்பே...எதிலும் நட்பே
...என்றும் நட்பே...
© All Rights Reserved