...

18 views

புன்னகை ஒன்று போதும்
எதிர்பார்த்த உறவுகள் விலகும் போதும்; 🚶எதிர்பாரா துயரங்கள் நெருங்கும் போதும் ;😔தூரம் தான் நிரந்தரம் ஆனபோதும்;🏃 துன்பங்கள் தூண்டிலாய் ஆகும் போதும்;😏மீனாக நானே சிக்கினாலும்;🐟மீள்வேனா என்று ஏங்கினாலும் ;😣வஞ்சனை மொத்தமாய் சூழ்ந்த போதும்;🐍போதும் போதும் என்றபோதும்;✋சிறிதாய் இன்பங்கள் வந்து செல்லும்;🎶நொடியில் அதுவும் மறைந்த போதும்;😭நினைவுகள் வருடி சென்றபோதும்;😊நித்திரை என்றோ மறைந்த போதும்;💤இருளே உலகாய் ஆனபோதும்;🌚கண்ணீர் ஊற்றாய் ஓடினாலும்;☔கடலாய் அதுவே மாறினாலும்;🌊கற்பனை நிறமற்று நின்றபோதும்;🌑கவலைகள் ஆயிரம் அமர்ந்த போதும்;🚬வெளி காட்ட சோகங்கள் உறங்கினாலும்; 💤ஒன்றே ஒன்று மட்டும் போதும்;󾠮 *☺அதுவே உந்தன் புன்னகை ஆகும்*☺