...

1 views

எதுவும் நிரந்தரமில்லை
ஆயிரம் பேர் ஆசீர்வதித்தாலும்
இருவர் வாழ்வு நிரந்தரமா என்ன

இறப்பின் பின் அழுகை
ஓரிரு நாள்தானே
கூடிய சுற்றமெல்லாம்
கூடி சிரிக்கவும்
கூடாததை பேசவுந்தானே

நாலுபேர் சேர்ந்து பிணப்பெட்டி எடுத்தாலென்ன
அவர்க்கும் இதே கதிதான்
என்பதை அறியாதவரா என்ன

வைத்தியர் என்ன
ஆங்கில மருத்துவர் என்ன நாள்குறிப்பை அவருக்காக
தள்ளியா வைக்கமுடியும்

கடவுளை கொண்டாடும் பூசாரியென்ன பக்தனென்ன
உயிரை காக்கவா முடியும்

நாத்திகனென்ன நல்லவனென்ன நாள்பட்டு வாழ்ந்திடவா முடியும்

நடப்பது என்னவோ நடந்துகொண்டுதான் இருக்கும்
உன் நடத்தைதான்
உன்னை யுகங்கடந்து பேசவைக்கும்
© MASILAMANI(Mass)(yamee)

Related Stories