...

2 views

மனிதம் பிறக்க மன்றாடும் மனிதன் இவன்…🙌
தேசத் துப்பாக்கியில்
தோசை சுடுவதும்
ஆசை தோட்டாவில்
மீசை வரைவதும்
பாசிச பரீட்சயதில்
பழகிவிட்ட பண்பாடே…

அதில்
என்னடா சிறப்பு?
அட்சய பாத்திரத்தில்
ஆட்சியை நடத்துவதே
நிச்சயம் மிகச் சிற(ரி)ப்பு…

கட்டிய
கோட்டையில்
கல்லணை நீர் திறப்பு
இழுத்துக் கட்டிய
எருமை மாடெல்லாம்
வரித்து கட்டிக்கொண்டு
அணிவகுப்பு…

பட்டய
பாட்டிலே
பாழாகும் தமிழ் இழப்பு
கொட்டிய
பண நோட்டிலே
ஆதீனம் அ(ரு)றவ(ரு)குப்பு…

பகவானே பாருமய்யா,
பட்டிதொட்டியெல்லாம்
கட்டிப்போடாமல்
விட்டுவிட்ட
விவாத விநோதங்கள்…

தொட்டிலாடும்
தொலைநோக்கு பார்வையில்
தூசி விழுந்த
துயர சம்பவங்கள்…

இரு நூறு ஆயிரம்
இன்னுமொராயிரம்
இல்லாத அளவுக்கு
பொருளாதார
பொற்கொலைகள்,
தற்கொலைக்குத் தகாத
தலைவரின்
தனி வழிகாட்டுதலில்…

வல்லரசிற்கு
வழியமைக்க
வன்மையைச் சிந்தும்
வரலாற்றுச் சம்பவங்கள்…

கேடிக்கு
கோடி கிடைத்தால்
மூடி இல்லாத ஜாடியில்
முகம் நுழைப்பதைப்போல்
முகஸ்துதிகளில்
முன்னேற்றம் காணும்
முட்டாள் மூடர்களில்
முடிசூடிய நிகழ்காலம்…

எங்கனம்
எங்களைக் காப்பாற்றும்
ஏக இறைவா…!
இனி வரும் எதிர்காலம்
இன்றுபோல்
புதிர் கோலமாக இல்லாமல்
கன்றுக்குப் பால் சுரக்க
பசுவிற்குக் கதிர்
விளைவதைப்போல்,
கட்டப்பட்ட
கைவிலங்கில்
கயவர்களின்
கட்சிகள் ஒளிந்து
கருணைகளில்
காட்சிப்படுத்தப்படும்
மனிதம் பிறக்க
மன்றாடும் மனிதன் இவன்…🙌

#தமிழ் #தமிழ்ப்பக்கம் #தமிழ்கவிதைகள் #தமிழ்கவிதை #தமிழ்வரிகள் #aaram_viral #tamilquotes
© aV ​✍🏾