...

5 views

வாழ்க்கை
நரை ஆக்கிரமிக்கும்
தலை முடிகளையெல்லாம்
உக்ரேன் தேசத்துப் பனிபோல்....
பொழுதுகளும் நாளும்
விழுங்கியவாறு வயதுகளை
ரஷ்யாவின் முடுக்கி
விடப்பட்ட படைகள் போல.....
இளமையின் பொலிவுகள்
எல்லாம் விரைந்து ஓடியவாறு
எல்லை கடந்து விட
முயற்சிக்கும் வாகனங்களின்
மெதுவான நகர்வு போல....
மரணம் மட்டும்
எல்லோரையும் விடாமல்
பயம் காட்டும் அனர்த்தங்களின்
மறைமுகப் பாதிப்பு போல.....
இதில் இருந்து விலகிவிட
நானென்ன நீயும் கூட
எத்தனைப் பகீரதப்பிரயத்தனங்களில்
ஈடுபட்டவாறு....
வாழ்க்கையை காப்பாற்ற
ஓடும் ஆன்மாக்களாக.....
களைத்துப் போய் திரும்பி
பார்க்கையில் ஐயோ
இலந்தை மரத்தடியில்
அனாதையாக விழித்தவாறு....
காதுகளில் ஒலிக்கின்றது
உலகின் ஓலங்கள்.....
என்னையறியாமல்
ஒரு பழக்க தோசத்தில்
நா முனுமுனுத்தது
பாவம் என்று .....
என் விதி நானறியாமல்.....


~ சிரியஸ் ~


© siriuspoetry