...

4 views

ஏழ்மை
பீடி சுருட்டுகிறாள் தாய் 'சிகரெட் பிடிக்காதே' என்று மகனை அதட்டிக்கொண்டு.

பலரக பட்டுப்புடவைகளை விரித்து காட்டினாள் பணிப்பெண் தன் கிழிந்த ஆடையை மறைத்துக்கொண்டு.

ஜன்னலுக்கு வெளியே மழையையும் மலையையும் கைகாட்டி மகிழ்கிறாள் ..
உள்ளே வந்து போகும் பத்து ரூபாய் பட்டாணியை பார்த்துக்கொண்டு.

ஒற்றைக்காலில் நடக்கிறாள் கயிற்றின் மேலே ஒருவேளை சோற்றை நினைத்துக்கொண்டு.

படிக்கத் தெரியாத பத்து வயது சிறுவன் மிதிவண்டியில் செல்கிறான். தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு போன்ற பன்மொழிச் செய்தித்தாள்களை கட்டிக்கொண்டு.

மேம்பாலத்திற்கு அடியில் கொசுவின் சங்கீத மழையில்
நாளை விடியும் என்று பலர் மன உறுதியோடு.
© Rajabalaji Nadanam