...

2 views

வாழ விடுங்கள்


ஒரு சிறுமியின் விண்ணப்பம்

கெஞ்சி கெஞ்சி கேட்கிறேன்
உங்கள் காலில் விழுந்தும்
கேட்கிறேன்
சாராயக்கடையை மூடுங்க ஐயா
ஏழையை வாழவிடுங்க ஐயா
குந்த இருந்த குடிசையும்
கந்தலாகி போச்சு ஐயா
கிழிந்த ஆடையில் அலைகிறேன்
அரை வயிறு கஞ்சி குடிக்கிறேன்
அப்பா அம்மா சண்டையில்
அடிக்கடி உயிர் போகுது
பள்ளிக்கூடம் போக முடியல
போனாலும்
மண்டையில் படிப்பு ஏறல
அன்பு பாசம் தொலைஞ்சு போச்சு
அப்பா பேசி நெடுநாள் ஆச்சு
வெளியில் தலைய காட்ட முடியல
மான ரோசமா வாழ முடியல
சாராயக் கடையே கதின்னு
அப்பன் சாஞ்சி கெடக்கிறான்
அழுதழுது கண்ணீர் வற்றி
அம்மா கசங்கி கெடக்கிறா
கெஞ்சி கெஞ்சி கேட்கிறேன்
உங்கள் காலில் விழுந்தும்
கேட்கிறேன்
சாராயக்கடையை மூடுங்க ஐயா
ஏழையை வாழவிடுங்க ஐயா

விக்ணு கௌசிகா
© VIGNU GHOUSIKA

Related Stories