...

2 views

உன்னாலே
உன் கவிதைகளில் உறைந்து போனது என் வலிகள்
வான் தொடும் உயரம் வளர்ந்த
போதும் மனதால் இன்றும் மழலையான உன் பேச்சில்
மறந்து போனது என் சோகங்கள்
தீராத நோயினை தீர்க்கும் மருந்தாய்
என் தீராத கவலைகளை தீர்க்கும் மருந்தாய் உன் காதல்
உன் காதலில் தினம் தினம் மூழ்கிட மறுபிறவி எடுத்திடுவேன்
உன்னை காணும் அந்த தருணத்தில் என் உயிர் பிரிந்தாலும் சுகம்தானடா
காதலின் அர்த்தம் புரிந்து கொண்டேன் உன் விழிகளை கண்ட நொடி
காதலின் அவஸ்தை புரிந்து கொண்டேன் உன் இதழ்கள்
பேசா நொடி
காதலின் இன்பம் புரிந்து கொண்டேன்
உன் கரங்களில் என் கரம் கோர்த்த நொடி
காதலின் துன்பம் புரிந்து கொண்டேன் நீ என்னை விட்டு
கொஞ்சம் விலகி சென்ற நொடி
காதலை புரிந்து கொண்டேன் உன்னோடு வாழ்ந்த நொடி
ஒவ்வொரு நொடியும் சுகமாய் மாறியது உன்னாலே
என் காதலே உயிர் பெறுவது உன்னால்
© All Rights Reserved