வாழ்க்கை
சிறகடிக்க ஏங்கிக் கொண்டிருந்த
எழுத்துக்களை
முறியடிக்க கட்டிப்போட்ட கடிவாளங்களை
துடிதுடிக்க தட்டிவிட்டதென் கவியார்வ மின்று....
பிடிகொடுக்க மொட்டுவிட்ட கவிப்பூக்கள் நன்று....
விழி ஈடிகைக் கின்றுயிர் பிறக்க
மொழி சாடிடவோர் பிறவி யெடுக்க
வழி வாடிய கதைக்கோர் உருகொடுக்க
வலி கூடியே இங்கோர் இதயம் உடைந்திருக்க....
யாதொரு அன்பிற்கும் யானொரு பொருட்டல்ல
யானெதை நேசிக்கும் இயல்பிலோர் வரமல்ல
யாரென அறியுமுன் நானுமே எனதல்ல
யாவரும் அறிந்திருந்தும் யாருமே எனக்கல்ல
நளபாகம் நடைபழகி விதிமதி எனதாகி
உளபாகம் பழுதாகி வான்மதி பிறையாகி
பௌர்ணமியில் இருள் சூழ்ந்து
உயிர் மையில் அடர் கூர்ந்து
விழி மையும் சுடர் தளர்ந்து
சக்கரத்தில் காலம் சுழல
அக்கரையில் பசுமை உழல
எக்கணமும் வாழ்க்கை பிறழ
வக்கணையாய் துயரே திரள
சிக்கனமாய் புன்னகை முயல
நெடுந்தூரம் கடந்தும் புலப்படவில்லை
பெருங்காத லொன்று உயிர்த்தெழவில்லை
சுடுந் தீயுன் சொல்லில் விடுபடவில்லை
கடுந்துயரம் இதுபோல் அகப்படவில்லை
இருந்திருந்தும் ஏனோ மனம் வரவில்லை
அணிந்திருந்த உரிமை புறந்தள்ளவில்லை
அருமருந்து தானோ உயிர் பெறாத நேசம்
அறமுறைந்த நாமோ நேசமறியா தேசம்
ஒரு முறையேனும் காதல்காற்று வீசும்
ஒவ்வொரு முறையும் உன்னையே பேசும்
எப்படியோ சூரியன்கள் உதிர்ந்தது
அப்படியே சந்திரன்கள் கரைந்தது
இப்படியும் வாழ்ந்த முட்கள் வளர்ந்தது
முப்படியில் சார்ந்தே நாட்கள் தொடர்ந்தது
நொடிக்கிடையில் வாழ்க்கையை வாழ்ந்திடு
தடிக்கிடையில் வேட்கையை கடந்திடு
-- கவிநேசகி
© கவிநேசகி
எழுத்துக்களை
முறியடிக்க கட்டிப்போட்ட கடிவாளங்களை
துடிதுடிக்க தட்டிவிட்டதென் கவியார்வ மின்று....
பிடிகொடுக்க மொட்டுவிட்ட கவிப்பூக்கள் நன்று....
விழி ஈடிகைக் கின்றுயிர் பிறக்க
மொழி சாடிடவோர் பிறவி யெடுக்க
வழி வாடிய கதைக்கோர் உருகொடுக்க
வலி கூடியே இங்கோர் இதயம் உடைந்திருக்க....
யாதொரு அன்பிற்கும் யானொரு பொருட்டல்ல
யானெதை நேசிக்கும் இயல்பிலோர் வரமல்ல
யாரென அறியுமுன் நானுமே எனதல்ல
யாவரும் அறிந்திருந்தும் யாருமே எனக்கல்ல
நளபாகம் நடைபழகி விதிமதி எனதாகி
உளபாகம் பழுதாகி வான்மதி பிறையாகி
பௌர்ணமியில் இருள் சூழ்ந்து
உயிர் மையில் அடர் கூர்ந்து
விழி மையும் சுடர் தளர்ந்து
சக்கரத்தில் காலம் சுழல
அக்கரையில் பசுமை உழல
எக்கணமும் வாழ்க்கை பிறழ
வக்கணையாய் துயரே திரள
சிக்கனமாய் புன்னகை முயல
நெடுந்தூரம் கடந்தும் புலப்படவில்லை
பெருங்காத லொன்று உயிர்த்தெழவில்லை
சுடுந் தீயுன் சொல்லில் விடுபடவில்லை
கடுந்துயரம் இதுபோல் அகப்படவில்லை
இருந்திருந்தும் ஏனோ மனம் வரவில்லை
அணிந்திருந்த உரிமை புறந்தள்ளவில்லை
அருமருந்து தானோ உயிர் பெறாத நேசம்
அறமுறைந்த நாமோ நேசமறியா தேசம்
ஒரு முறையேனும் காதல்காற்று வீசும்
ஒவ்வொரு முறையும் உன்னையே பேசும்
எப்படியோ சூரியன்கள் உதிர்ந்தது
அப்படியே சந்திரன்கள் கரைந்தது
இப்படியும் வாழ்ந்த முட்கள் வளர்ந்தது
முப்படியில் சார்ந்தே நாட்கள் தொடர்ந்தது
நொடிக்கிடையில் வாழ்க்கையை வாழ்ந்திடு
தடிக்கிடையில் வேட்கையை கடந்திடு
-- கவிநேசகி
© கவிநேசகி