...

4 views

தாம் + பத்தியம்…
‘தாம்பத்தியம்

அறிவிலிக்கு ஆனதோ

தாம் பத்தியம் என்றே?

பக்திக்குப் பாலூட்டும்

முக்தி வான்களே

சக்திக்கு அப்பால்

சாகுதே உன் உறவு

சலனமில்லாமல்

போகுதே உன் உணர்வு

சாக்கடை கழிவில்

பூக்கடை பூக்கள்

நாட்கணக்கில்

நசுங்குவதும்

நியாயம் தானோ?

பணமீட்டும்

பிணமாகத்

தினம் தினம் நீ ஓட

கணம் பொழுதேனும்

காமத்தின்

கருவறையைக்

கவனத்தில் தேடு,

கன்னியின்

மனநிலையில்

எண்ணித்தான் பாரும்
...