...

2 views

சில நேரங்களில்
தவறான புரிதல்கள்
விதியின் பிழையான பாதைகள்
கவராத அருகாமைகள்
தவறவிட்ட உரசல்கள்
தவித்துப்போன ஏக்கங்கள்
தனித்துப்போன தேடல்கள்
சலித்துப்போன மோகங்கள்
திருப்தியற்ற வேட்கைகள்
அடக்கமுடியாத ஆசைகள்
அடங்கிப்போகாத காமங்கள்
விழுமியம் பேணாத பார்வைகள்
வரையறை போடாத பேச்சுக்கள்
நேரம் தவறிய சந்திப்புகள்
நாசிகள் ஈர்க்கும் வாசங்கள்
பாதுகாக்கப்படாத கற்புகள்
களவாடப்பட்ட கனவுகள்
ஆளுமையைச் சீண்டும் விமர்சனங்கள்
இறையச்சம் இன்றிய உள்ளங்கள்
இச்சையின்றிய சிந்தனைகள்
தடுமாறிய தருணங்கள்
தகர்த்து போட்டுவிடும்
தரமான வாழ்க்கை பாதையை.......




© siriuspoetry