...

7 views

அவள் என்னவள்!
அவள் இமைகளில்
நான்இருக்க
ஆசை இல்லை ....
அவள் வெறுமையில்
தோள்சாயும்
தோழனாக ஆசை!

அவள் கைசேர
ஆசை இல்லை....
அவள் புன்னகை
சிந்திட ஆசை!

அருகில் இருந்து
தொலைந்திட
ஆசை இல்லை.....
தொலைவில் இருந்து
தேடிட ஆசை!

பேசிட ஆசை இல்லை
அவளின் மௌனத்தை
படித்திட ஆசை!

கரையோர அலையில்
கால் நனைத்திட ஆசை இல்லை....‌
அவளின் கனவு
கரைசேர்ந்து நடந்திட ஆசை!

நான்
அவளின்
என்னவனாக ஆசை !

அவள் என்னடிமை
ஆக ஆசை இல்லை....
அவள் என்னவள்
ஆக ஆசை!
#காதல்#தமிழ்வரிகள்
#என்னவள்#என்னவன்
#wtitcopost #tamilpost

© Nuradhaag