...

1 views

கூந்தல் நெளிவில்…
நெளிந்தோடும்
நீள நதியாய்
களைந்தாடும்
கார்மேக கூந்தலே!

காற்றிலாடும்
கூந்தலில்
கவிதை மேகம்
காதலில்
விழுந்துவிட்டதோ!

கார்குழலை
கண்டுவிட்டு
கருமேகமென
எண்ணி
வான்
மழையும்
வந்துவிட்டதோ!

பின்னல் அழகை
பின்னால் கண்ட
பிரம்ம தேவனின்
பித்து விளையாட்டோ!

மண்ணில் மலரும்
பூக்களெல்லாம்
உன் கூந்தலை
அலங்கரிக்க
மாதவம் கிடக்கின்றதோ!

விண்ணில் உள்ள
நட்சத்திரங்களெல்லாம்
உனக்காக மண்ணில்
மலராய் பூக்க
விரதம் இருக்கின்றதோ!

பிடிவாதமாக
பிறையும் கருநிற
கூந்தலில் மயங்கி
மங்கிய ஒளியில்
அமாவாசையாகிறதோ!

சடைபின்னிய சலனமே
இடையின் நடையில்
இடைவிடாமல் இமைக்க
இன்னிசை நடனமிடுகிறாயே!

பாவலர் பாட்டு
தேவைதானோ
பாவையின் கூந்தல்
பாரில் பரவசமாக
பறந்தாடுவதற்கு!

தாரகையின்
தலையை
நிரப்பினிற்கும்
விலை மதிப்பற்ற
கூந்தலே!
கலையின் மதிப்பு
கரைபுரளும்
காதல் ஆசைதானோ!

கண்ணியவளின்
கார்குழலில்
கவிதை பாடாதோர்
பூ மண்ணில்
யாருமுண்டோ!

#தமிழ் #தமிழ்ப்பக்கம் #தமிழ்கவிதைகள் #தமிழ்கவிதை #தமிழ்வரிகள் #aaram_viral #tamilquotes

© aV ​✍🏾