...

8 views

ஒரு கை ஓசை
எந்நாளும் என் நேசம் உன்னோடு வாழ்ந்திடும்
எப்போதும் என் சுவாசம் உன் பேரை ஏந்திடும்
உன் நெஞ்சம் அன்பை மறுத்த போதிலும்
உன்னில் காதல் தோன்றா பொழுதிலும்
உனக்கும் சேர்த்து எனக்குள் காதல் பூத்திடும்
நமக்குள் கோர்த்து வைத்த பாசம் வளர்ந்திடும்
இமைக்குள் சேர்த்த கனவாக வாழ்க்கை இனித்திடும்
இதற்குள் நீங்காத உறவு ஜென்மங்கள் தொடர்ந்திடும்
எனக்குள் உறங்காத கனவுகள்
சொர்க்கத்தில் சிறந்திடும்

© கவிநேசகி