...

12 views

மழை வரும் நேரம்
அந்த மாலை நேரத்தில் வழக்கத்திற்கு மாறாக எந்தவொரு பறவையும் தனது கீச்சிடும் ஒலியை எழுப்பவில்லை...
அதனால் என்றும் இல்லாத அமைதியான சூழல் அந்த மாலை நேரத்தில்...
வெளியே வந்து பார்த்த நான் அந்த மயான அமைதியில் சற்றே திகைத்தேன்...
கோழிகள் குஞ்சுகளுடன் குடப்பில் அடைய,
அப்பா மாடுகளை அவசர அவசரமாக பிடித்து வந்து கொட்டகையில் கட்டி அவற்றிற்கு உணவளித்துவிட்டு வேகமாக வீட்டினுள் நுழைந்தார்...
அம்மா தேவையான விறகுகளை எடுத்து வைக்க, அக்காவோ காய்ந்து இருந்த துணிகளை எடுத்து வந்து வீட்டின் கொடிக்கயிற்றில் போட்டாள்...
சற்றே இளந்தென்றல் காற்றில் மிதந்து வர,
மரங்களில் இருந்து இலைகளை உதிர,
அந்த அழகிய தென்றல் தவழ்ந்து வந்த பொழுதை சற்றே திடுக்கிடும்படி செய்தது எதிர்பாராமல் ஒன்றன் பின் ஒன்றாக வந்தது மின்னலும் இடியும்...
பசுக்களும் கன்றுகளும் அம்மா என ஓலமிட,
சேவல் கொக்கரிக்க
தூக்கத்தில் இருந்து எழுந்து
வந்த எனக்கு சற்றே புரிந்தது...
#மழைபெய்யப்போகிறதுபோல என்று...
#villagelife #justforfun #COVID-19