...

16 views

அர்ப்பணிப்பு
அர்ப்பணிப்பு

செம்மொழியான தமிழ்மொழியே
ரசிக்கும் நாங்கள் உன் அழகிலே
தேனாய் சுவைக்கும் இனிப்பான உன் சொற்கள்
நெஞ்சில் குடியிருக்கும் என்றும் எங்கள் மனதிலே

என்றும் உன்னை மறந்ததில்லை
என்றும் உன்னை அழித்ததில்லை
பகிர்கின்றோம் என்றும் எங்கள் நாவிலே
போற்றுகின்றோம் உம்மை எங்கள் கவிதையின் வரியிலே

திரண்டும் வேற்று மொழியின் வாசம்
என்றும் நிலை நாட்டும் உன் வேகம்
தாய்மொழியாய் உருவெடுத்து எங்கள்
உதட்டில் சரணம் பாடுகின்றாய்

உலகமே போற்றும் உன் திருவடி
அகரமே உன் முதல் கருவறை
திருவள்ளுவரே படைத்த திருக்குறளே
பாரதி புனைத்த கவிதைகளே
உன் வாசமே என்றும் படைப்பிலே

மறவாதே உன்னை என்றும் எங்கள் மனதிலே
போற்றும் நாங்கள் உன்னை என்றும் இப்புவியிலே

தமிழே எங்கள் சொந்தம்
தமிழே எங்கள் பந்தம்
உமது அர்பணிப்பே நான் சுரக்கும்
இந்த கவிதையின் பால்.