...

6 views

கண்ணனின் காதலி
அந்திசாயும் வேளையில்
ஆத்தங்கரை ஓரத்தில்
கண்ணு ரெண்டும் யாரை தேடுதடி?
கண்ணன் மறைந்திருப்பான் என்றே உன் பார்வை அலையுதடி,

கண்ணனின் காதலியே
அந்த கண்ணனுக்கு
நீ மட்டுமா காதலி?
காண்போரை எல்லாம் வசியம் செய்யும் மாய கண்ணனவன்
அழகிகளோடு விளையாடி பொழுது போக்குபவன்,

பிரிவும் பிரிதலும்
காதலுக்கு இயல்பில்லை என்றாலும்
கண்ணனுக்கு இயல்பு தானடி,

அழகு வீணானது
இளமை தேய்ந்தது
என்று கண்ணீர் வடிக்காதே,
தலைவன் வருவான்
பசலை நோயும் ஆகாதே,
இருவரும் கூடி மகிழும்
தருணம் வரும் மனம் வருந்தாதே,

நீலமணி வண்ணன்
மாயங்களின் மன்னன்
உலகை காக்கும் கண்ணன்
உன்னையும் நோக்குவானடி
என்றாவது உன்னிடம் சேருவானடி,

தென்றலாய் இருப்பான்
பூக்களாய் மலருவான்
பௌர்ணமியாய் ஒளிருவான்
பகலவனாய் ஒளித்தருவான்
பக்கத்தில் நின்று சூழ்ச்சிகள் செய்வான்,

கலங்காதே பெண்ணே
இது மாயவனின் விளையாட்டு
உனக்கு கிடைக்கும் கண்ணனின் தாலாட்டு
இது எல்லாம் நடந்த பின்பு
நீ கண்ணனை பாராட்டு.
- சங்கத்தமிழன்