...

3 views

அதீத காதல்
அவனுக்கு அவள் மீது
கொஞ்சமும் காதல் இல்லை..
ஆனால், அவளுக்கோ
அவன் மீது அதீத காதல்..
அவன் இள வயதைக் கூட பொருட்படுத்தாமல்
துரத்தி.. துரத்தி.. காதலித்தாள்..
அது கோரப்படாத காதல்..
அவனோ விட்டுவிடு என்றான்.
அவளோ முடியாது என்றாள்..
அவனை ஓட ஓட விரட்டினாள்..
ஓடினான்.. ஓடினான்..
தீராத மோகத்துடன் அவன் மீது பாய்ந்தாள்..
அவளிடமிருந்து அவனால் தப்ப முடியவில்லை..
அவளது காமப் பசிக்கு
வலுக்கட்டாயமாக
இரையாகிப் போனான்..
அவள் இன்னும் அவனை
விடாமல் துரத்துகிறாள்..
அவளுக்கு ஆசை வரும்போதெல்லாம் அவன் மீது
வெறிகொண்டு பாய்கிறாள்..
ஒவ்வொரு முறையும்
அவன் அவளிடம் தோற்கிறான்.
அவளுடைய கோரப் பசிக்கு இறையாகிறான்..
அவளின் காமப் பசிக்காக
இன்று வரை வேட்டையாடல் தொடர்கிறது..
அவளை விட்டு விலகும் நாட்களை எதிர்பார்த்து
இன்று வரை போராடி வருகிறான்
வறுமை என்ற அந்த அரக்கி
குரூரமான முகத்துடன் அவனை விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறாள்!

விக்ணு கௌசிகா
© VIGNU GHOUSIKA